டிஎன்பிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் திண்டுக்கலில் உள்ள என்பிஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் நெல்லை அணி பேட்டிங் செய்தது.
நெல்லை அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் எடுத்தது. நெல்லை அணியை மடக்க முக்கிய காரணமே திருப்பூர் அணியின் வேக பந்துவீச்சாளர் புவனேஸ்வரன் தான் ஏனென்றால், நேற்று நடைபெற்ற போட்டியில் அவர் 1 இல்லை ..2 இல்லை மொத்தமாக 5 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன் மூலம் இந்த சீசன் டிஎன்பிஎல் தொடரில் ஒரே போட்டியில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதணையை அவர் படைத்தார்.
புவனேஸ்வரன் 5 விக்கெட் எடுத்த காரணத்தால் நெல்லை அணி 18.2 ஓவர்களில் தனது அணைத்து விக்கெட்களையும் இழந்தது. அருமையாக பந்து வீசி புவனேஸ்வரன் 5 விக்கெட் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் கண்டிப்பாக அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்கள் என கூறி வருகிறார்கள். இதோ அந்த அசத்தல் வீடியோ…
Raise your hands for this TNPL’s first 5-fer! Bhuvaneswaran writes himself into the record books! ???? #TNPLonFanCode pic.twitter.com/ofGrB7tZYa
— FanCode (@FanCode) June 20, 2023
மேலும், நெல்லை அணி 124 ரன்கள் குவித்த நிலையில், 125 ரன்கள் எடுத்த வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்த நிலையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணியை வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.