விருமன் படப்பிடிப்பிலிருந்து வெளியான புதிய புகைப்படம்.!

விருமன் படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படம் வைரலாகி வருகிறது. 

கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “கொம்பன்” படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்துக்கு “விருமன்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார்.

viruman 3

இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது விருமன் படப்பிடிப்பில் அதிதி ஷங்கர் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.