#BREAKING: இதுவரை இல்லாத அளவாக ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சம் …!

கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு காரணமாக ஜிஎஸ்டி வரி வசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இதையடுத்து, தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தகங்கள் இயங்க ஆரம்பிக்க தொடங்கினர். இதனால், ஜிஎஸ்டி வரி வசூல் ஒவ்வொரு மாதம் அதிகரித்திருந்தது.

இந்நிலையில், கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,15,174 கோடி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் சிஜிஎஸ்டி ரூ .21,365 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ .27,804 கோடி, ஐஜிஎஸ்டி ரூ .57,426 கோடி (பொருட்கள் இறக்குமதி செய்ய சேகரிக்கப்பட்ட, 27,050 கோடி உட்பட) மற்றும் செஸ் ₹ ரூ .8,579 கோடி (பொருட்கள் இறக்குமதி செய்ய சேகரிக்கப்பட்ட 971 கோடி உட்பட)

கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 2020 டிசம்பருக்கான வருவாய் உடன் ஒப்பிடும்போது 12% அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ. 1,13, 866 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டது அதிகபட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பாக தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.6,422 கோடியும், கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.6,905 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020 -ஆம் ஆண்டு தமிழகத்தில் மட்டும் 8 % உயர்ந்துள்ளது.

 

author avatar
murugan