காஷ்மீர் மற்றும் குஜராத்தையும் சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம்!

காஷ்மீர் மற்றும் குஜராத்தையும் சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம்!

பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் இந்தியாவின் காஷ்மீர் மற்றும் குஜராத் பகுதிகளையும் இணைத்து பாகிஸ்தானுக்கு சொந்தமான பகுதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் அண்மையில் அந்நாட்டின் புதிய மேப் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவின் பகுதிகளான காஷ்மீர் மற்றும் குஜராத்தில் ஜுனாகத் ஆகிய பகுதிகளை பாகிஸ்தானுக்கு சொந்தமாக பகுதிகளாக குறிப்பிட்டுள்ளார். இந்த வரைபடத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை இது நிறைவேற்றுவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆனால் பாகிஸ்தானின் இந்த வரைபடத்தை முற்றிலும் மத்திய அரசு நிராகரித்து இது தொடர்பாக கண்டனங்களையும் பதிவு செய்து வருகிறது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், அரசியல் வரைபடம் என்ற பெயரில் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள வரைபடத்தை நாங்கள் பார்த்தோம். இது ஒரு அபத்தமான அரசியல் நடவடிக்கை எனவும், இந்தியாவின் குஜராத் மற்றும் எங்களின் காஷ்மீர் லடாக் யூனியன் பிரதேசங்கள் உரிமை கோருவதை எங்களால் ஏற்க முடியாது, இந்த வரைபடம் சட்டப்படி குற்றம், சர்வதேச நம்பகத்தன்மையில் இது இல்லவே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube