புதிய தகவல் தொழில்நுட்ப விதி – இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!

டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை விதைத்து சென்னை உயர் நீதிமன்றம்.

கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த முறை சமூக ஊடகங்களில் நாட்டின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் எதிராக இருக்கும் தகவல்களை தடுப்பற்காக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என மத்திய அரசு விளக்கமளித்திருந்தது.

இந்த விதிமுறை படைப்பாளிகளின் மற்றும் எழுத்தாளர்களின் சுதந்திரத்துக்கு எதிராக கூறி, கர்நாடக இசை கலைஞர் டிஎம் கிருஷ்ணா, டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதற்கு மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளில் பதிப்பாளர்களை பாதுகாக்கும் வகையில் உள்ளது என்றும் நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையும் பாதுகாக்கும் வகையில் தான் இந்த புதிய விதிகள் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணை வந்தபோது, டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை விதைத்து சென்னை உயர் நீதிமன்றம்.

மத்திய அரசு கண்காணிப்பு மூலம் கட்டுப்படுத்துவது, ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும் ஊடகங்களின் சுதந்திரத்தை பறிப்பதாக இருந்தால் ஜனநாயகத்தின் 4வது தூண் இல்லாமல் போய்விடும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு மும்பை நீதிமன்றம் விதித்த தடை நாடு முழுவதும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.

மும்பை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு 15 நாட்கள் கழித்தும் மத்திய அரசு நோட்டிஸ் அனுப்பியுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது. அனைத்து உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளில் தொடர்பான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்காவிட்டால், அக்டோபர் இறுதியில் வழக்கை விசாரிக்கிறோம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்