பீஸ்ட் படத்தின் தற்போதைய நிலை.? வெளியான புதிய தகவல்.!!

பீஸ்ட் படத்தின் தற்போதைய நிலை.? வெளியான புதிய தகவல்.!!

பீஸ்ட் திரைப்படத்தின் லேட்டஸ்ட் தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இப்படத்தில் செல்வராகவன், சைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், லில்லிபட் பரூக்கி போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

beast vijay movie 2

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சில நாட்களில் படக்குழு வெளிநாடு செல்லவுள்ளது. அங்கு படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

beast vijay movie

இந்நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு  65% சதவீதம் வரை முடிந்துள்ளதாம். வரும் நவம்பர் மாதம் படப்பிடிப்பு முடித்துவிட்டு படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube