மோகன்லாலின் பிரமாண்ட படத்தினை குறித்த புதிய தகவல்.!

மோகன்லாலின் பிரமாண்ட படத்தினை குறித்த புதிய தகவல்.!

நடிகர் மோகன்லாலின் பிரமாண்ட படத்தினை குறித்த புதிய தகவல் கிடைத்துள்ளது. 

மலையாள சினிமாவின் கிரான்ட் மாஸ்டர் தான் மோகன்லால். இவருக்கென்று ரசிகர் பட்டாளம் நிறையவே உண்டு. இவர் தற்போது பிரமாண்ட திரைப்படமான மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். 100கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். ஆஷிர்வாத் சினிமாஸ் பேனர்ஸின் கீழ் ஆண்டனி பெரும்பாவூர் இந்த படத்தை தயாரிக்கிறார். கேரளாவில் 16ம் நூற்றாண்டில் புகழ்பெற்ற மாலுமி குஞ்சாலி மரக்கார் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார். மோகன்லாலின் இளம் பருவத்தை பிரணவ் மோகன்லால் நடிக்கிறார். பிரணவ்க்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன் சர்ஜா, நெடுமுடி வேணு, இன்னசென்ட், சுஹாசினி, முகேஷ் மற்றும் பல வெளிநாட்டு நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவரும் இந்த படம் இந்தி மொழியிலும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படம் மார்ச் 28ல் உலகம் முழுவதும் உள்ள  5000 திரையரங்குகளில் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் திடீரென பரவிய கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் மூடப்பட்டன. இதுவரை ஊரடங்கால்  மலையாள சினிமாவிற்கு 600 கோடி வரை  இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   தியேட்டர்கள் திறக்கப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் ஆகும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தை டிசம்பர் மாதத்திலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இயக்குநர் பிரியதர்ஷன் நேரலை ஒன்றில் படத்தை வெளியிடுவதில் எந்த அவசரமும் இல்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube