புதிய ஹால்மார்க் விதி : தமிழகம் முழுதும் இன்று காலை 11.30 மணி வரை நகை கடைகள் அடைப்பு….!

புதிய ஹால்மார்க் விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதுமுள்ள நகை கடைகள் அனைத்தும் இன்று காலை 11.30 மணி வரை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நகை கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு தங்க நகைக்கும் 6 இலக்கம் கொண்ட தனி ஹால்மார்க் அடையாள எண் கட்டாயம் என இந்திய தர நிர்ணய நிறுவனம் புதிய விதி ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய விதி வருகின்ற செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த புதிய ஹால்மார்க் விதிக்கு நகைக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நகைகளுக்கு தனி அடையாள எண் பெற வேண்டுமானால், நகை வாங்குவோரின் தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்படுவதாகவும், இதனால் தனிநபர் ரகசியம் காக்க இயலாத சூழல் உருவாகும் எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த புதிய ஹால்மார்க் விதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகை கடைகளும் காலை 9 முதல் 11 .30 மணி வரை மூடப்படும் என நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal