புதிய விரைவு ரயில் – சுற்றறிக்கைக்கு தெற்கு ரயில்வே ட்விட்டரில் மறுப்பு.!

மதுரையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை புதிய ரயில் இயக்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான சுற்றறிக்கைக்கு தெற்கு ரயில்வே விளக்கம்.

மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக மேட்டுப்பாளையம் வரை புதிய விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வேயின் பெயரில் சுற்றறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இந்த நிலையில், மதுரையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ரயில் இயக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெற்கு ரயில்வே பதிவிட்டுள்ள பதிவில், MDU மற்றும் MTP இடையே ரயில் அறிமுகம் குறித்த தெற்கு ரயில்வே அறிவிப்பு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அத்தகைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எங்களால் வெளியிடப்படவில்லை என்பதை இதன்மூலம் தெளிவுபடுத்துகிறோம்.

மேலும், இது நேர்மையற்ற நபர்களின் இழிவான செயலாகத் தெரிகிறது என்றும் தவறான தகவல்களை சமூகவலைத்தளங்கள் வாயிலாக பரப்பி வருவதாகவும் தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.