அமேசான் நிறுவனத்தின் புதிய பரிணாமம்.! ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்யும் ‘அமேசான் பார்மசி’.!

அமேசான் நிறுவனம் புதிதாக ஆன்லைன் மருந்து விற்பனையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக தொடங்கியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அதிகமான மக்கள் ஆன்லைன் மூலம் மருந்துகள் வாங்குவது அதிகமாகியுள்ளது. அதனை கணக்கில் கொண்டு ஆன்லைன் வர்த்தகத்தில் பிரபல நிறுவனமாக வலம் வரும் அமேசான் நிறுவனமும் ஆன்லைன் மருந்து விற்பனையை தொடங்கியுள்ளது. அதற்கு முன்னோடியாக கடந்த வாரம் பெங்களூரில் ‘அமேசான் பார்மசி ‘ சேவையை தொடங்கியுள்ளது. இனி இந்தியா முழுவதும் இந்த இந்திய மருந்து விற்பனையை அமேசான் தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே முகேஷ் அம்பானி நடத்தி வரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு போட்டியாக தற்போது ஜெஃப் பெஸாஸின் அமேசான் நிறுவனமும் ஆன்லைன் மருந்து விற்பனை சேவையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த அமேசான் பார்மசியில் உள்ள மருந்துகள் அனைத்தும் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படுவதாகவும், பார்மசியில் இந்திய மூலிகை மருந்துகள் உட்பட மருத்துவ சாதனங்களும் வழங்கப்பட உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.