புதிய கல்விக்கொள்கை ! முதலமைச்சர் குழுவை அறிவிப்பார் -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

புதிய கல்விக்கொள்கை ! முதலமைச்சர் குழுவை அறிவிப்பார் -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய முதலமைச்சர் விரைவில் குழுவை அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அண்மையில் புதிய கல்விக்கொள்கை குறித்து அறிவித்தது.ஆனால் இந்த அறிவிப்பில் மும்மொழிக் கொள்கை குறித்த அறிவிப்பிற்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இதனால்   தமிழக அரசு  மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இரு மொழி கல்வி கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார் .

இதனிடையே சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய முதலமைச்சர் விரைவில் குழுவை அறிவிப்பார். தமிழக அரசு அமைக்கும் குழுவின் கருத்தை அறிந்த பிறகே புதிய கல்விக் கொள்கை குறித்து முடிவெடுக்கப்படும். மும்மொழிக் கொள்கை தொடர்பாக முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.

]]>

Latest Posts

சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இதுவரை 4,86,479 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ்.!
#BREAKING: தமிழகத்தில் இன்று 5,516 கொரோனா.! 60 பேர் உயிரிழப்பு.!
"கொரோனா பரவலின் இரண்டாம் அலை தவிர்க்க முடியாதது!"- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
இந்தியாவின் முதல் இலவச WiFi விமானம்.. விஸ்டாரா நிறுவனம் அறிவிப்பு.!
‘ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது திமுக’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ.!
முதல்வரின் சுற்றுப் பயணங்கள் ஒத்திவைப்பு..!
மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்-க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.!
"விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளது!"- பிரதமர் மோடி