புதிய கல்விக் கொள்கை: இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரை.!

புதிய கல்விக் கொள்கை: இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரை.!

புதிய கல்விக் கொள்கை தொடர்பான நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

21 ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி என்ற தலைப்பில் காணொலி மூலம் இன்று காலை 11 பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை 2020க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்விக்கொள்கை வரும் ஆண்டே  அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே, ஆசிரியர்களை வாழ்த்தியும், புதிய கல்வி கொள்கையை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில், ஷிக்‌ஷா பர்வ் (கல்வி விழா) எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இவ்விழா கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் நிகழ்ச்சியில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பல்வேறு கருத்தரங்குகள், மெய்நிகர் மாநாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இரண்டு நாட்கள் மாநாட்டை மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இதில், இன்று காலை நடைபெறவுள்ள மாநாட்டில் காணொளிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொண்டு 21ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார். இதற்குமுன்பு கடந்த 7-ஆம் தேதி ஆளுநர்கள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் கலந்து கொண்டு மோடி உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube