புதிய கல்விக் கொள்கை..உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நாளை ஆலோசனை.!

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நாளை ஆலோசனை நடத்துகிறார்

 கடந்த ஆண்டு ஜூன் 01-ஆம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிடப்பட்டது.இதன்மீது ஜூன் 30-ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பின்னர், பல மாற்றங்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய கல்விக் கொள்கை வரைவுகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டது.

மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை  புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டது. அதில்,  ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியிலியே பயிற்றுவிக்க வேண்டும், மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நாளை ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், உயர்கல்வித்துறை  செயலாளர் , அதிகாரிகள் என பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

author avatar
murugan