விரைவில் புதிய கல்வித்துறை.! கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.!

  • 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். புதிய கல்விக்கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்றும், கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்க நாடாளுமன்றத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்பொழுது அவரது உரையில், விரைவில் புதிய கல்வித்துறை கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார். பின்னர் கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இதைத்தொடர்ந்து நிதியமைச்சர் பேசுகையில், மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும், கூடுதலாக மருத்துவர்களை உருவாக்கவும் திட்டம் செய்லபடுத்தவுள்ளது என்று தெரிவித்தார். மேலும் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் இந்தியாவில் கல்விக் கற்க வாருங்கள் திட்டம் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பிரபலப்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்