வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு- இந்திய வானிலை மையம்..!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு- இந்திய வானிலை மையம்..!

வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மத்திய கிழக்கு வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு எனவும் மே 23ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 5 நாளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுமா என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. நேற்று முன்தினம் குஜராத்தில் டவ்- தே புயல் கரையை கடந்தது. இந்த புயலை தொடர்ந்து வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube