டெல்லியில் குறைந்தது வரும் கொரோனா,2 மாதத்திற்கு பிறகு கொரோனா பாசிட்டிவ் ரேட் 2 சதவீதத்திற்கு கீழ் குறைவு

டெல்லியில் குறைந்தது வரும் கொரோனா,2 மாதத்திற்கு பிறகு கொரோனா பாசிட்டிவ் ரேட் 2 சதவீதத்திற்கு கீழ் குறைவு

மகிழ்ச்சி செய்தி டெல்லியில் குறைந்து வருகிறது கொரோனா,புதிய பாதிப்பு 1,491 ஆக பதிவு.

டெல்லியில் முழு ஊரடங்கு அமலுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் கனிசமாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,491 பேர் கொரோனாவல் புதிதாக பாதிப்படைந்துள்ளனர். மேலும் 130 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் கொரோனா பாசிட்டிவ் ரேட் 1.93 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவரை டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,21,477 பேராக அதிகரித்துள்ளது, மேலும் இன்று மட்டும் 3,952 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை 13,78,634 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது டெல்லியில் உள்ள கொரோனா வார்டில் 19,148 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் இன்று மட்டும் 77,103 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube