அந்தமான் கடற்பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு …!

அந்தமான் கடற்பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு …!

அந்தமான் கடற்பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் அவர்கள், அடுத்த 48 மணி நேரத்தில் அதாவது இன்று மேற்கு வடமேற்கு பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று உருவாக வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube