வங்க கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி! ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை மையம்!

வங்க கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி.

நாளை வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 நாள் கனமழை பெய்யும் என்பதால் கேரளா, கர்நாடகாவிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள  நிலையில், குஜராத், மகாராஷ்டிராவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள், தென்மேற்கு மத்திய மேற்கு, அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு  மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.