, , , ,

புதிய வேளாண் கல்லூரி – நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

By

புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

   
   

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிருஷ்ணகிரியில் புதிதாக அரசு தோட்டக்கலை தொடங்கப்பட்டது.

வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி 2021-22 ஆம் ஆண்டில் கரூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர், சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு ஆகிய இடங்களில் மூன்று புதிய அரசு வேளாண்மை கல்லூரிகள் துவங்குவதற்கு மாநில அரசு தலா ரூ.10 கோடி வீதம் மொத்தம் ரூ.30 கோடி நிதியினை ஒதுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinasuvadu Media @2023