புதிய வரைபடத்தில் இந்தியாவின் நிலங்களை சொந்தம் கொண்டாடிய நேபாளம்.!

இந்தியாவின் வளத்தின் எதிர்ப்பின் காரணமாக தற்காலிகமாக நேபாளத்தின் புதிய வரைபடத்தின் நிறைவேற்றும் மசோதா ஒத்திவைப்பு.

புதிய வரைபடத்தின் இந்தியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய நேபாளத்திற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்ததை அடுத்து அந்த வரைபடத்தை வெளியிடும் திட்டத்தை அந்நாட்டு அரசு ஒத்திவைத்திருக்கிறது. தங்கள் நாட்டில் கொரோனா பரவ இந்தியா தான் காரணம் என்று நேபாளம் பிரதமர் கே.பி.சர்மா ஓலி பழி சுமத்தியதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே பனிப்போர் வெடித்தது. கடந்த வாரம் அந்த நாடு வெளியிட்ட புதிய வரைபடத்தில் இந்தியாவின் மலைப்பகுதிகள் மற்றும் நிலப்பரப்புகள் நேபாளத்துக்கு சொந்தமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு இந்தியாவின் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுப்பப்பட்டது. காளி நதிக்கு இருபுறமும் உள்ள பகுதிகளை இருநாடுகளும் சொந்தம் கொண்டாடி வருவதாக நேபாளம் அளித்த விளக்கத்தை இந்தியா ஏற்கவில்லை. இதனையடுத்து இந்தியாவின் வளத்தின் எதிர்ப்பின் காரணமாக தற்காலிகமாக அந்த வரைபடத்தை வெளியிடும் முடிவை நேபாளம் அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.

இந்த புதிய வரைபடத்துக்கு நேபாளத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இதனால் நாடாளுமன்றத்தில் புதிய வரைபட மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை, இதனிடையே சீனாவின் தூண்டுதலால் இந்தியாவுடன் எல்லை பிரச்னை நேபாளம் கையில் எடுத்துள்ளதாக இந்திய ராணுவ தளபதி எம்.எம் நரவனே தெரிவித்துள்ளார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்