23-வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சொந்த சாதனையை முறியடித்த நேபாளி

நேபாள நாட்டின்  சொலுகும்பு மாவட்டத்தில்  தேம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர்

By murugan | Published: May 16, 2019 07:19 AM

நேபாள நாட்டின்  சொலுகும்பு மாவட்டத்தில்  தேம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் காமி ரீட்டா ஷெர்பா (வயது 49). இவர் உலகின் மிக உயரமான (8,850 மீட்டர்) உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில்  கடந்த 1994-ம் ஆண்டில் ஏற தொடங்கினார். மலையேற்ற குழுவை சேர்ந்த காமி ரீட்டா ஷெர்பா. காமி ரீட்டா மலை ஏறுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.இந்நிலையில் இவர் கடந்த 2017-ம் ஆண்டு வரை 21 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய பெருமையை பெற்றார். இதனால் அபா ஷெர்பா மற்றும் பூர்பா டஷி ஷெர்பா ஆகிய இருவரின் சாதனை சமன் செய்தார். பின்னர் இவர்கள் இருவரும் மலையேற்றத்தில் இருந்து ஓய்வு பெற்றனர். கடந்த ஆண்டு காமி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி அதிக முறை மலையேறிய நபர் என்ற சாதனையை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து இந்த வருடமும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி நேற்று காலை 23-வது முறையாக சிகரத்தின் உச்சிக்கு சென்று தனது சொந்த சாதனையை முறியடித்து உள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc