இத்துனூண்டு நெல்லிக்காயில் ஒளிந்திருக்கும் இமாலய மருத்துவ நலன்கள்!

நாம் சிறியதென நினைத்து கண்டுகொள்ளாமல் விடும் நெல்லிக்கனியின் பலன்கள் தெரிந்தால்

By manikandan | Published: Nov 20, 2019 06:08 AM

நாம் சிறியதென நினைத்து கண்டுகொள்ளாமல் விடும் நெல்லிக்கனியின் பலன்கள் தெரிந்தால் நீங்கள் வியப்படைவது நிச்சயம். ஒரு மனிதனுக்கு நோய் வரக்காரணம் வாதம் பித்தம் கவம் மூன்று முக்கிய நாடிகள் அதன் சமநிலையை இழக்கும் போது நோய் வருகிறது. நெல்லிக்காய் அதனை தடுத்து மூன்றையும் சமநிலையில் வைத்து மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. நெல்லிக்காய் மனிதனுக்கு குளிர்ச்சியூட்டவும், மலமிளக்கியாகவும், வீரியம் தரும் மருந்தாகவும், சிறுநீரக பிரச்சனைகளை சரி செய்யவும் பயன்படுகிறது. நெல்லிக்காயுடன் கடுக்காய் மற்றும் சாதிக்காய் சேர்த்து திரிபலசூரணம் பொடி செய்து அதனை தினமும் சாப்பிட்டு வந்தால் குடல் சுத்மாகும். அதிகமாக பசி உணர்வை தூண்டும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். இந்த பொடி மூலம், மலச்சிக்கல் போன்ற பல நோய்களுக்கும் முக்கிய மருந்தாக பயன்படுகிறது. நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் மூளை புத்துணர்ச்சி அடையும். நெல்லிக்காய் ஜூஸ் செய்து குடித்தால் நிறைய பலன்கள் கிடைக்கும். அதனை செய்வதற்கு 10 பெரிய நெல்லிக்காயை எடுத்து அதனை துருவி அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் அரை கப் சீனி, 2 ஸ்பூன் தேன், ஒரு எலுமிச்சம்பழ சாறு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஜூஸ் செய்து தினமும் குடித்து வந்தால் கண் பார்வை நன்றாக தெரியும். ரத்தசோகை நீங்கும். முடி வளர வழிவகை செய்யும்.
Step2: Place in ads Display sections

unicc