நெல்லை போக்குவரத்து கழகத்தில் இருந்து இன்று முதல் 900 பேருந்துகள் இயக்கம்.!

நெல்லை போக்குவரத்து கழகத்தின் கீழ் இன்று 900 பேருந்துகள் இயங்க உள்ளது. காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள 5ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற 6 மண்டலங்களில் மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகளை மட்டும் 60 சதவீத பயணிகளுடன் (40 பேர் மட்டும்) இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி (கன்னியாகுமரியில் பேருந்து இயங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்) மாவட்டங்கள் அடங்கிய மண்டலங்களுக்குள் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நெல்லை போக்குவரத்து கழகத்தின் கீழ் இன்று 900 பேருந்துகள் இயங்க உள்ளது. காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

அதே போல தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 7 டிப்போக்களில் (தூத்துக்குடி -2, விளாத்திகுளம், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், எட்டையபுரம்) இருந்து 118 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

பேருந்துகள் பயணம் முடிந்ததும் கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். ஓட்டுனர்கள் , நடத்துனர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். நடத்துனர் கண்டிப்பாக கையுறை, முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.