நேரு அருங்காட்சியகத்திற்கு பிரதமர் அருங்காட்சியகம் என பெயர் மாற்றம்.!

By

PrimeMinistersMuseum

நேரு அருங்காட்சியகத்திற்கு பிரதமர் அருங்காட்சியகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் கண்டனம். 

டெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகத்திற்கு பிரதமர் அருங்காட்சியகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம்  பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியின் தீன் மூர்த்தி வளாகத்தில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை, பிரதமர் அருங்காட்சியகம் என பெயர் மாற்ற மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

சமீபத்தில் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த சிறப்பு கூட்டத்தில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை பிரதமர் அருங்காட்சியகம் என மாற்றுவது என முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், நேரு அருங்காட்சியகத்திற்கு பிரதமர் அருங்காட்சியகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் கார்கே, சொந்தமாக எந்த வரலாறும் இல்லாதவர்கள், மற்றவர்களின் வரலாற்றை அழிக்க முயற்சி செய்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

டெல்லியில் உள்ள இந்த அருங்காட்சியகம் 1964-ம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் மறைவுக்கு பிறகு நிறுவப்பட்டது. இதனை, அப்போதைய இந்திய ஜனாதிபதி சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். 1948 மே 27 முதல் 1964 வரை முன்னாள் பிரதமர் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.