மே-23ம் தேதி NEFT சேவை நிறுத்தம் – ரிசர்வ் வங்கி

மே-23ம் தேதி NEFT சேவை நிறுத்தம் – ரிசர்வ் வங்கி

மே மாதம் 23-ஆம் தேதி அன்று NEFT சேவை இயங்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை தான் மக்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. நேரடி பரிவர்த்தனையை விட அதிகமான மக்கள் ஆன்லைன் மூலமாக தான் பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர். ஆன்லைன் பரிவர்த்தனையில், NEFT & RTGS முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நிலையில், மே மாதம் 23-ஆம் தேதி அன்று NEFT சேவை இயங்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, மே 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை  பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சமயங்களில் பண பரிவர்த்தனை நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube