நீட் ,ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்க்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

நீட் ,ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்க்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு  வகையானதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. அதைப் போல, நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.இதனை மேலும் தள்ளி வைக்க  வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது.இதையடுத்து நீட் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு மத்திய அரசு  உத்தரவிட்டது.

இதன் பின் மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு  செப்டம்பர்  13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக 11 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில்.அவர்களது மனுவில்,கொரோனா கட்டுக்குள் வந்தவுடன் தேர்வை நடத்த வேண்டும் என்றும் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை எழுதுவதற்கு மாவட்டத்திற்கு ஒரு தேர்வு மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.