நீட் தேர்வு அன்று செய்வதறியாமல் விழி பிதுங்கிய மாணவர் !உரிய நேரத்தில் உதவி செய்த காவலர் சரவணக்குமார்

நீட் தேர்வு அன்று செய்வதறியாமல் விழி பிதுங்கிய மாணவர் !உரிய நேரத்தில் உதவி செய்த காவலர் சரவணக்குமார்

கோவையில் உள்ள ஒரு பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவருக்கு   காவலர் ஒருவர் உதவி செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

நீட் தேர்வு என்றாலே தமிழகம் முழுவதும் ஒரு தரப்பினர் அதற்கு ஆதரவு தெரிவித்த்தும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.குறிப்பாக நீட் தேர்வில் தோல்வி அடைந்து மருத்துவ இடம் கிடைக்காததால் அரியலூரில் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.எனவே நீட் தேர்வால் தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றது.

நேற்று முன்தினம் நாடு முழுவதும்  மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 15.19 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வு தமிழ், ஹிந்தி உட்பட 11 மொழிகளில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் 14 நகரங்களில் 188 தேர்வு மையங்களில் 1,34,711 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

இந்நிலையில் கோவையில் உள்ள ஒரு பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவருக்கு   காவலர் ஒருவர் உதவி செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

கோவையில் உள்ள ஒரு பள்ளியிலும் நீட் நுழைவுத் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்து.இங்கு மாணவர் ஒருவர் தேர்வு எழுத வந்தார்.ஆனால் அவரிடம்புகைப்படம்இல்லாத காரணத்தால் அவர் அவர் தேர்வு அறைக்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை.செய்வதறியாமல் மாணவர் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தார்.இதை அங்கு பணியில் இருந்த காவலர் ஒருவர் பார்த்தார்.உடனே அந்த மாணவனை அழைத்து அவரிடம் காரணத்தை கேட்டார்.பின்னர் அவர் தன்னிடம் இருந்த ரூ.40-ஐ எடுத்து கொடுத்தது மட்டும் அல்லாமல் ,அந்த மாணவனுக்கு தேர்வு எழுத  அனுமதி ஏற்படுத்தியும்  கொடுத்தார்.காவலர் செய்தது சிறிய உதவியாக இருந்தாலும் உரிய நேரத்தில் அந்த மாணவனுக்கு உதவியதை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.இந்த அருமையான செயலை செய்த காவலரின் பெயர் சரவணக்குமார் ஆகும்.நீங்களும் இந்த காவலரின் உதவியை வாழ்த்த விரும்பினால் வாழ்த்துங்கள்…

 

 

 

 

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *