நீட் தேர்வு 2023; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை.!

தேசிய தேர்வு முகமை(NTA), நீட் தேர்வு 2023க்கான தேர்வு நடைபெறும் தேர்வு நகரச் சீட்டை வெளியிட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை நடத்தும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை) (NEET) மே 07, 2023 அன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 02:00 முதல் மாலை 05:20 மணி வரை இந்தியா முழுவதும் மற்றும் இந்தியாவுக்கு வெளியே உள்ள நகரங்களில் சுமார் 499 நகரங்களில் காகித முறைப்படி  (ஆஃப்லைன்) நடைபெறுகிறது.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கான முக்கிய அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த நீட் நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்த மருத்துவ ஆர்வலர்கள், அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in இல் இருந்து தேர்வு அறிவிப்புச் சீட்டைப் பதிவிறக்கலாம் என்று அறிவித்துள்ளது.

இதன்படி NEET UG 2023 தேர்வுக்கான நகரச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது உள்நுழை விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, தேர்வு நகர அறிவிப்புச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம், இதில் குறிப்பிடப்பட்ட தேதியிலிருந்து அடுத்த இரண்டு நாட்களில் அட்மிட் கார்டை விண்ணப்பதாரர்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

 

author avatar
Muthu Kumar