நீட் நுழைவுத்தேர்வு – அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் நுழைவுத்தேர்வு – அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை அவகாசத்தை நீட்டித்தது தேசிய தேர்வு முகமை.

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடையவிருந்த நிலையில், வரும் 20-ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.  இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் 20-ம் தேதி இரவு 9 மணிக்குள்ளாக https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதனிடையே, நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர NEET UG தேர்வு நடத்தப்படுகிறது. 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கியது. ஏற்கனவே விண்ணப்பிக்கும் அவகாசம் நீடிக்கப்பட்டியிருந்த நிலையில், மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *