அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் – அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

நீட் பயிற்சி வகுப்புகளை அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார். வழக்கமாக டிசம்பரில் தொடங்கும் நீட் பயிற்சி இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கப்பட உள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் இந்த  நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பயிற்சியானது, திறன்மிக்க ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. நடந்து முடிந்த நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களில் 80% பேர் தோல்வியடைந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment