நீலகிரி மாவட்டம் உதகையில் மீண்டும் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

நீலகிரி மாவட்டம் உதகையில் மீண்டும் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக பனிப்பொழிவின் தாக்கம் சற்று குறைவாக காணப்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.
கேத்தி பள்ளத்தாக்கு, உதகை தலைக்குந்தா பகுதிகளில் அதிக அளவிலான பனிப்பொழிவு காரணமாக, புல்வெளிகள் வெண்ணிற கம்பளம் விரித்தது போல் காட்சியளித்தது. புல்வெளியில் படர்ந்துள்ள பனியில் நடந்துசென்று சுற்றுலாப் பயணிகள், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன், பனியின் பின்னணியில் உற்சாகத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
source: dinasuvadu.com

Leave a Comment