“நாம் அனைவரும் கொரோனாவை தடுக்க வேண்டும், தடுப்பு நடவடிக்கைகளை அல்ல”- பிரதமர் மோடி!

நாம் அனைவரும் இணைந்து கொரோனாவை தடுக்க வேண்டும், தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக, தினசரி பாதிப்பு 30,000-ஐ கடந்துள்ள நிலையில், கொரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி போடும் பணிகளை மாநில அரசு விரைவுபடுத்தும் பணிகள் குறித்து பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்களுடன் காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்பொழுது பேசிய பிரதமர், நாடு முழுவதும் 70 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறிய அவர், மக்களிடையே கொரோனா பரவல் தொடர்பான அச்சத்தை குறைப்பது, அரசின் கடமை என கூறினார். அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் என கூறிய பிரதமர், தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என தெரிவித்தார்.

மேலும், கொரோனா பரவலை நாம் மீண்டும் தடுக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற காரணத்தினால், நாம் அனைவரும் இணைந்து கொரோனாவை தடுக்க வேண்டும், தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது என தெரிவித்துள்ளார்.