நீட் மசோதா விவகாரம் : வழக்கு தொடர இருக்கிறோம்-அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழக சட்டப்பேரவையில்  நீட்தேர்வு மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது.அப்போது சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.அவர் பேசுகையில், நீட் மசோதா தொடர்பான மத்திய அரசின் இமெயில் கடிதத்திலும், பிரமாண பத்திரத்திலும் ரிஜெக்ட் என்ற வார்த்தை இடம்பெறவில்லை.ரிட்டன் என்ற வார்த்தையே இடம்பெற்றிருந்தது என்று கூறினார்.

நீட் விலக்கு மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் திருப்பி அனுப்பப்பட்டதற்கான காரணம் தெரிந்தால்தான் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய முடியும் .

நீட் விலக்கு மசோதாவில் என்ன குறை இருக்கிறது என மத்திய அரசிடம் கேட்டு வழக்கு தொடர இருக்கிறோம் என்று தெரிவித்தார்.