ட்விட்டரில் "Edit" ஆப்ஷன் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்- ட்விட்டர் அதிரடி!

மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தால் ட்விட்டரில் "எடிட்" ஆப்ஷனை

By surya | Published: Jul 03, 2020 03:31 PM

மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தால் ட்விட்டரில் "எடிட்" ஆப்ஷனை வழங்கவுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது.

தற்போதுள்ள காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. குறிப்பாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், பேஸ்புக், போன்ற சமூக வலைத்தளங்கலில் மக்கள் அதிமாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, ட்விட்டரில் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். தனது பயனர்களுக்கு ட்விட்டர் நிறுவனம் பல பயனுள்ள அப்டேட்களை வழங்கி வந்தாலும், பெரும்பாலான மக்கள், ட்விட்டரில் "எடிட்" ஆப்ஷனை கொண்டுவருமாறு பல வருடங்களாக கோரிக்கை வைத்துள்ளார்.

ட்விட்டரில் நீங்கள் ஒரு பதிவை பதிவிட்ட பிறகு, அதில் ஒரு சிறிய தவறு இருந்ததாக அறிந்தால், அந்த பதிவை டெலீட் செய்து புதிதாய் மற்றொரு பதிவை பதிவிட முடியுமே தவிர, அதனை எடிட் செய்யமுடியாது. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டது.

அதில், அனைவரும் முகக்கவசம் அணிந்தால், ட்விட்டரில் "எடிட்" ஆப்ஷன் வழங்கப்படும் என தெரிவித்தது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், பொதுமக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ட்விட்டர் நிறுவனம் இந்த முதுவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc