28.9 C
Chennai
Tuesday, June 15, 2021

ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் “நெற்றிக்கண்” திரைப்படம்.!!


50
/ 100


  • நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகை நயன்தாரா, அண்ணாத்த, நெற்றிக்கண் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதில் நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க மிலிந்த் ராவ் இயக்குகிறார். இவர் 2017ஆம் ஆண்டு வெளியான அவள் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார் .தனது அறிவை பயன்படுத்தி கொலை செயய்யும் சீரியல் கில்லரை எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பது தான் கதை.

இந்நிலையில், நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகின்ற ஜீலை மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இதுவும் கடந்து போகும் என்ற பாடல் நேற்று முன்தினம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news