பிரபுதேவாவுடன் நடிக்கிறாரா நயன்தாரா..? உண்மை தகவல்

இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை

By bala | Published: Jun 04, 2020 11:42 AM

இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தர்பார் இந்த படத்தை தொடர்ந்து ஆர்ஜெ பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துவருகிறார், இந்த படத்தின் இரண்டு லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்றே கூறலாம். மேலும் தற்பொழுது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது வில்லு படத்திற்கு பிறகு மீண்டும் பிரபுதேவா மற்றும் நயன்தாரா அடுத்த படத்தில் இணையவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபுதேவா இயக்கத்தில் இசாரி கணேஷ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நயன்தாரா நடிக்க வுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்க கட்டிடங்களுக்கு நிதி திரட்டுவதற்காக இரட்டை ஹீரோ திட்டம் ஒன்றை எடுக்க போவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தார். 'இரட்டை ராஜா வெள்ளை ராஜா' என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் கார்த்தி மற்றும் விஷால் நடிப்பதாக கூறப்பட்டது.

மேலும் சில நாட்கள் படப்பிடிப்புகள் நடத்தப்பட்ட இந்த படம் கடைசியில் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த படத்தை எடுக்க போவதாகவும், இதில் விஷாலுக்கு பதிலாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக கார்த்தி நடிப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc