கிடைக்க வேண்டியது கிடைத்தே ஆகும், அதுதான் வழக்கம்…நவீன் உல் ஹக்கின் இன்ஸ்டா பதிவு.!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு பிறகு லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நேற்றைய  போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் போது, லக்னோ வீரர் க்ருனால் பாண்டியாவின் கேட்சை பிடித்த பின் ரசிகர்களை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன் ஒன்றை கொடுத்தார். இதைப்போல, இதற்கு முன்பு ஏப்ரல் 10-ம் தேதி பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில், லக்னோ அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பெங்களூர் ரசிகர்களை பார்த்து, வாயில் விரலை வைத்து “சத்தம் வரக்கூடாது” என செய்தார்.

அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ”அமைதியாக இருக்க வேண்டாம் இன்னும் சத்தம் எழுப்புங்க” என்பது போல் செய்கை காண்பித்தார்.  நேற்றைய ஐபிஎல் போட்டிக்குப் பின் வாக்குவாதத்தில் நவீன் உல் ஹக்கின் மற்றும் விராட் கோலி ஈடுபட்டனர். இந்த வாக்கு வாதம் பற்றி சமூக வலைதள பக்கங்களில் விராட் கோலிக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

விராட் கோலி பதிவு:

இதனையடுத்து, விராட் கோலி இன்ஸ்டா ஸ்டோரில் ”நாம் பார்க்கும், கேட்கும் விஷயங்கள் அனைத்துமே அவரவரின் தனிப்பட்ட கருத்துக்கள்தான். அவை எதுவும் உண்மை அல்ல” என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நவீன் உல் ஹக்கின் பதிவு:

இதனை தொடர்ந்து, நவீன் உல் ஹக்கின் தனது இன்ஸ்டா ஸ்டோரில்,  “உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே ஆகும், அதுதான் வழக்கம்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். ராட் கோலி இன்ஸ்டா பதிவை தொடர்ந்து, நவீன் உல் ஹக்கின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

100% அபராதம்:

ஐபில் நடத்தை விதிகளை மீறியதாக இருவருக்கும் போட்டிக் கட்டணத்தில் இருந்து 100% அபராதம் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. அதைப்போல, லக்னோ அணி வீரர் நவீன் உல் ஹக்கிற்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.