கன்னியாகுமரியில் சிறப்பாக நடைபெற்ற நவராத்திரி விழா..!

கன்னியாகுமரியில் இருந்து, சுவாமி சிலைகள் மற்றும் பண்டைய மன்னரின் உடைவாள் ஆகியன நவராத்திரி பூஜைக்காக திருவனந்தபுரம் நோக்கி புறப்படும் நிகழ்வு  நடைபெற்றது.
பண்டைய மன்னரின் உடைவாள் மற்றும் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, குமாரகோவில் முருகன், தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய 3 சாமி சிலைகள்  பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டது.
இவை அனைத்தும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக எடுத்துச் செல்லப்படுகின்றது.  இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கேரள அமைச்சர்கள் கடகம்பள்ளி சுரேந்திரன், கடனப்பள்ளி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Comment