வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே பொடுகை முழுவதுமாக போக்கும் 6 வழிகள் இதோ.!

எப்போதுமே மண்டை அரித்து கொண்டே இருக்கிறதா..? பேன் தொல்லைனு நினைச்சிட்டு இருந்திருப்பீங்க..! ஆனால், இது அதை விட சற்று மோசமான பொடுகு தொல்லை என்பது தான் உண்மை. ஆம், பொடுகு வந்து விட்டால் முடி உதிர்வு, வழுக்கை, மேலும் சில உடல் நல கோளாறுகளும் கூடவே நமக்கு உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இப்படி வருகின்ற பொடுகை ஷாம்பூவை வைத்து போக்குவது சரியல்ல. இதன் வேதி தன்மை முடியின் ஆரோக்கியத்தை குறைத்து இதனை பாழாக்கி விடும். ஆதலால், வீட்டில் இருக்க கூடிய ஒரு சில பொருட்களை வைத்தே நம்மால் இதற்கு முற்றுப்புள்ளி தர முடியும். இந்த 6 எளிய வீட்டு முறைகளை இனி பார்க்கலாம்.

வேப்பிலை
பொடுகை போக்க சிறந்த வைத்தியம் வேப்பில்லை தான். 4 கப் நீரை கொதிக்க விட்டு அதில் ஒரு கைப்பிடி வேப்பிலையை சேர்க்கவும். 10 நிமிடத்திற்கு மிதமான வெப்பத்தில் சூடு செய்து இறக்கி கொள்ளவும். இதனை இரவு முழுவதும் அப்படியே விட்டு, மறுநாள் காலையில் இதன் நீரை மட்டும் வடிகட்டி, தலைக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லை நீங்கி விடும்.

எலுமிச்சை
2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலைக்கு தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும். 20 நிமிடத்திற்கு பின் முடியை சிகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். இந்த முறையை வாரத்திற்கு 1 அல்லது 2 முறை தவறாது செய்தால் பொடுகு முழுவதுமாக நீங்கி விடும்.

வெந்தயம்
2 ஸ்பூன் வெந்தயத்தை நீரில் மூழ்கும் அளவிற்கு இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும். அடுத்த நாள் காலையில் இதை மைய அரைத்து கொண்டு, தலைக்கு தடவி 30 நிமிடம் சென்று தலைக்கு குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு தோலை தூக்கி போடாமல் மிதமான வெயிலில் உலர வைத்து பொடியாக அரைத்து கொள்ளவும். அதன்பின் இவற்றில் 2 ஸ்பூன் எடுத்து கொண்டு 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது நீர் சேர்த்து தலைக்கு தடவி, குளித்து வந்தால் பொடுகில் இருந்து விடுபடலாம்.

தயிர்
பொடுகை போக்க தயிரையும் நாம் பயன்படுத்தி கொள்ளலாம். 2 ஸ்பூன் தயிரை எடுத்து கொண்டு பொடுகு உள்ள இடத்தில் தடவி 1 மணி ஊற வைத்த பின் தலைக்கு குளித்து வரலாம்.

இந்த 5 வீட்டு முறைகளும் பொடுகை மிக எளிதாக 2 வாரத்திற்குள் போக்கி விடும். ஆதலால், இந்த முறைகளை பயன்படுத்தி பொடுகில் இருந்து விடுபடுங்கள்.

Leave a Comment