29 C
Chennai
Tuesday, April 13, 2021

#BREAKING: நாடு முழுவதும் செப்டம்பர் 30 வரை ரயில் சேவைகள் ரத்து.!

கொரோனா பாதிப்பு காரணமாக செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது எனவும், விரைவு ரயில், பயணிகள் ரயில் உள்ளிட்ட அனைத்து வகை ரயில்களும் ரத்து என ரயில்வே துறை அறிவித்துள்ளது. தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் காரணாமாக கடந்த மார்ச் 24-ம் தேதி நாடு முழுதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஆகஸ்ட் 12 -ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து  என்று ரயில்வே வாரியம் கூறியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Latest news

Related news