நாடு முழுவதும் செப்டம்பர் 30 வரை ரயில் சேவை ரத்தா..? ரயில்வே அமைச்சகம் விளக்கம்.!

கொரோனா பாதிப்பு காரணமாக செப்டம்பர் 30-ஆம் தேதி வரை  விரைவு ரயில், பயணிகள் ரயில் உள்ளிட்ட அனைத்து வகை ரயில்களும் ரத்து செய்யப்படுவதாகவும் ,தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே வாரியம் சுற்றறிக்கை ஒன்று வெளியானது. 

இதுகுறித்து, ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அனைத்து வழக்கமான ரயில்களை ரயில்வே ரத்து செய்துள்ளதாக செய்தி வெளியானது, அது தவறானது. ரயில்வே அமைச்சகத்தால் சுற்றறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 12 -ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து என்று ரயில்வே வாரியம் அறிவித்தது. அந்த அறிவிப்பு நாளை மறுநாளுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan