#NationalFilmAwards: திரைப்படங்களுக்கு உகந்த மாநிலம் அறிவிப்பு!

திரைப்பட தயாரிப்புக்கு மிகவும் உகந்த மாநிலமாக மத்திய பிரதேச தேர்வு என அறிவிப்பு.

டெல்லியில் 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்து வருகிறது. 5 பிரிவுகளின் கீழ் 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020 ஜனவரி 1 முதல் 2020 டிசம்பர் 31-ஆம் தேதி வரை திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கு தகுதி பெற்றவை.

தேசிய திரைப்பட விருதுகளுக்கு 305 கதைப்படங்களும், 140 ஆவணப்படங்களும் வந்துள்ளன. 15 மொழிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுகளுக்கு போட்டியிடுகின்றன. இந்த நிலையில், திரைப்படத் துறைக்கான மிகவும் சாதகமான மாநில விருது மத்திய பிரதேச மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விருது உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு அறிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment