தேசிய வாக்காளர் தினம் இன்று..!

இந்தியாவில் உள்ள இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் நாளாக இந்திய அரசாங்கத்தால் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளின் முக்கிய நோக்கம் வாக்களிப்பது என்பது மக்களது முக்கியமான கடமையாக நினைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும்.

இந்திய குடிமக்களுக்கு 18 வயது நிரம்பினால் அவர்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. வாக்களிப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டை தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.