,

டியூசன் எடுக்கும் ஆசிரியர்களுக்கு அந்த உயரிய விருது கிடையாது.! பறக்கும் உத்தரவுகள்.!

By

டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க கூடாது. அரசியல் சம்பந்தம் உள்ள ஆசிரியர்கள் பெயரை நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க கூடாது. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

வருடம் தோறும் தேசிய அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தலைமை ஆசிரியராக, ஆசிரியராக பணியாற்றுபவர்களில் இருந்து சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த தினமான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தின விழாவில் சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்படும்.

இந்த விருதுக்கு தமிழகத்தில் இருந்தும் ஆசிரியர்கள் பரிந்துரைக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த வருடம் பள்ளிக்கல்வித்துறை புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்திலிருந்து 386 ஆசிரியர்களை விருதுக்கு பரிந்துரை செய்ய புதிய நடைமுறை வெளியாகி உள்ளது. அதில் அரசியல் சம்பந்தம் உள்ள ஆசிரியர்கள் பெயரை நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க கூடாது எனவும்,

டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க கூடாது எனவும் புதிய விதிகள் அதில் சேர்க்கப்பட்டுள்ளது..