காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் நடைபயணம் நிறைவு.! ஜம்மு காஷ்மீரில் தேசிய கொடி ஏற்றம்.!

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை நிறைவு நாளை முன்னிட்டு காஷ்மீர், ஸ்ரீநகரில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. 

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தில் கன்னியாகுமரியில் தனது ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். அங்கிருந்து கேரளா வழியாக, கர்நாடகா மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் என பல்வேறு மாநிலங்களை கடந்து, சுமார் 70க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தனது நடைப்பயணத்தை மேற்கொண்ட ஒற்றுமை யாத்திரை இன்று நிறைவடைய உள்ளது.

சுமார் 3,970 கிமீ தூரம் தொடர்ந்த இந்த ஒற்றுமை யாத்திரையின் இந்த நிறைவடையும் நிகழ்வானது காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்று வருகிறது. ஒற்றுமை யாத்திரை நிறைவு நாளில் பல்வேறு கட்சியினரின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிறைவு நாளை முன்னிட்டு ஸ்ரீநகரில் பிரமாண்ட இந்திய தேசிய கொடி தற்போது ஏற்றப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment