புதிய கல்விக்கொள்கை – பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்

புதிய கல்விக்கொள்கை – பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்

இந்தியாவின் கல்வியின் தரத்தை மேலும் உயர்த்தவே புதிய கல்விக் கொள்கை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 இறுதி சுற்றில் பிரதமர் மோடி உரையாற்றினார்.அப்பொழுது அவர்  புதிய கல்விக்கொள்கை குறித்து பேசுகையில்,  புதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி இவற்றிற்கு முக்கியத்துவம், தர வேண்டும்.21 ஆம் நூற்றாண்டின் புதுமைக்கேற்ப கல்வியை பயன்படுத்த வேண்டும்.கல்வி, விளையாட்டுத்துறையில் உலகத்தரத்திற்கு நிகரான வசதிகளை உருவாக்க வேண்டும்.இந்தியாவின் கல்வித்திட்டம் புதுமையாகவும், நவீனமாகவும் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.இந்தியாவின் கனவையும், வருங்கால சந்ததியினரின் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டே புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த நூற்றாண்டுகளில், சிறந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களை உலகிற்கு வழங்கியுள்ளோம்.இந்தியாவின் தரமான கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் தேசிய கல்விக்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.புதிய கல்விக் கொள்கை மூலம் கல்வி முறையில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளன.கற்றல், ஆய்வு, புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தவே புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டு அறிவின் யுகம,கல்வி, ஆராய்ச்சியில் முன்னேற்றம் கொண்டுவர வேண்டும் என்பதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம் ஆகும். வேகமாக மாறிவரும் உலகில், இந்தியா தனது பயனுள்ள பாத்திரத்தை வகிக்க வேகமாக மாற வேண்டும்.

இந்தியாவின் கல்வி மிகவும் நவீனமாக மாற வேண்டும், இங்கே திறமைக்கு முழு வாய்ப்பு கிடைக்கிறது.மாணவர்கள் அதிநவீன கல்வியைப் பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.பல பட்டங்கள் பெற்றும் வேலைக்கு உதவவில்லை நம்பிக்கையை தரவில்லை.
நம் குறைபாடுகளை முதலில் நாம் உணர வேண்டும் என்று பேசினார்.

Join our channel google news Youtube