குடியுரிமை விவகாரத்தில் காங், தலைவர் சோனியாவை பொய்யின் மீது எழுச்சியை உண்டாக்கும் ஒரு நாஜியின் உண்மையான நாஜி மகளே என சு.சாமி கடுமையான சாடல்.

குடியுரிமை விவகாரத்தில் காங், தலைவர் சோனியாவை பொய்யின் மீது எழுச்சியை உண்டாக்கும் ஒரு நாஜியின் உண்மையான நாஜி மகளே என சு.சாமி கடுமையான சாடல்.

  • குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர்  என அனைவரும்  போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகிறது.
  • இதற்க்கு ஆதரவு அளித்த சோனியா காந்தியை நாஜியே என குறிப்பிட்டு கடுமையாக சாடல்.
இந்நிலையில், இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக  காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி காணொலி காட்சி மூலம் தனது ஆதரவை தெரிவித்தார். மேலும் அவர், பாரதிய ஜனதா கட்சியின் இந்த அரசு மக்களின் குரலுக்கு செவிசாய்ப்பது இல்லை  எனவும் மக்களை முற்றிலுமாக புறக்கணிக்கிறது எனவும் மாணவர்கள், மக்கள் ஆகியோர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடுகிறது எனவும் கடுமையாக சாடியிருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தியைக் குறிப்பிட்டு டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று ஒரு பொய்யின் மீது எழுச்சியை உண்டாக்கும் நாஜி வீரரின் மகளே உண்மையான நாஜி என்றும், இந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட்டால் என்றால் நீங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர். அதுவே முஸ்லிம்கள் ஆதரவாக  செயல்பட்டால் நீங்கள் மதச்சார்பற்றவர்" என்று கடுமையாக விமர்சித்து  இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.