AUSvIND: அணியில் இடம்பெற்ற யாக்கர் மன்னன் நடராஜன்.. ஆனால் போட்டியில் விளையாடவில்லை!

ஐபிஎல் தொடரில் யாக்கர் மன்னன் என அழைக்கப்படும் தமிழக வீரர் நடராஜன், தனது அபார யாக்கரால் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் தற்பொழுது நடைபெற்று வரும் முதல் போட்டியில் அவர் விளையாடவில்லை.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்:

கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் ஒருநாள் போட்டி இன்று தொடங்கிய நிலையில், முதலில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இரு அணிகளும் அதிரடியாக விளையாடி வருகிறது.

சைனிக்கு காயம்:

இந்த தொடர் தொடங்கும் முன், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் நவதீப் சைனிக்கு முதுகில் காயம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் இன்று நடைபெறும் போட்டியில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அவருக்கு மாற்று வீரராக நடராஜனுக்கு ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே இந்திய அணியில் முகமத் ஷமி, பும்ரா, நவதீப் சைனி ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடராஜன் இல்லை:

இந்தநிலையில், ஆஸ்திரேலியா தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து விளையாடும் வீரர்களை கேப்டன் கோலி அறிவித்தார். அப்பொழுது நவ்தீப் சைனிக்கு அணியில் இடம்பெற்ற நிலையில், முதல் போட்டியில் நடராஜன் இடம்பெறவில்லை.

அடுத்தடுத்து போட்டியில் நடராஜன்?

தற்பொழுது கேப்டன் கோலியின் இந்த முடிவால் குழப்பமடைந்த ரசிகர்கள், சைனிக்கு காயம் ஏற்பட்டதால், எப்படி அவரை முதல் போட்டியில் எடுக்கலாம்? என்ற கேள்வி எழுந்துள்ளது. டெஸ்ட் அணி வீரர்கள் தான் சுழற்சி முறையில் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ள நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளில் சைனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, நடராஜன் அணியில் இடம்பெற அதிகளவில் வாய்ப்புள்ளது.