‘ஹலோ விக்ரம்’ : குறுஞ்செய்தி அனுப்பிய நாசா! கண்டுகொள்ளாத லேண்டர் விக்ரம்!

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்களத்தை விண்ணில் செலுத்தியது. அதில் இருந்து பிரிந்த ஆர்பிட்டர் பகுதி நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. ஆர்பிட்டரில் இருந்து, தென்துருவ நிலவின் தரைப்பகுதியை ஆராய விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது.

அப்போது நிலவின் தரையினை நெருங்குகையில் விக்ரம் லேண்டர், இஸ்ரோவுடனான தொடர்பை துண்டித்தது. இதனால், மீண்டும் லெண்டருடனான தொடர்பை மீட்க இஸ்ரோ போராடி வருகிறது. லெண்டரை தேடும் பணியில் அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் கைகோர்த்துள்ளது.

இதில் நாசா 2009ஆம் ஆண்டு அனுப்பிய புலனாய்வு லேண்டர் நிலவை சுற்றி சோதனையிட்டு வருகிறது. அப்போது விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தில லேண்டரை புகைபடமெடுக்கவும், அதனுடன் தொடர்ப்பை ஏற்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஹலோ விக்ரம் எனும் குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டது. ஆனால், லேண்டர் தரப்பில் எந்தவித தகவலும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.