நிலவின் புதிய படத்தை வெளியிட்ட நாசா.! 2024இல் மனிதர்களை நிலாவுக்கு அனுப்ப திட்டம்.!

நாசாவின் ஓரியன் ராக்கெட் தனது முதல் விண்வெளிப்பயணத்தின் போது  நிலவின் மிக அருகில் எடுக்கப்பட்ட படத்தை அனுப்பியுள்ளது.

நவம்பர் 16 அன்று நாசாவிலிருந்து ஓரியன் ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (SLS) ராக்கெட் சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் நோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது. ஆர்ட்டெமிஸ் I மிஷன் என்று அழைக்கப்படும் இந்த சோதனை ராக்கெட் ஓரியன், சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் சென்று, பிறகு பூமியை நோக்கி திரும்பும் போது டிசம்பர் 11 அன்று அட்லாண்டிக் பெருங்கடலில் அது விழுந்துவிடும்.

இந்த ஓரியன் ராக்கெட் சந்திரனின் பின்பக்கத்தில் சென்று, நிலவின் மேற்பரப்பில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் பறந்து, பூமியிலிருந்து ஒருபோதும் பார்க்க முடியாத நிலவின் தொலைதூரப் படங்களை, விண்கலத்தில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் எடுத்து அனுப்பியுள்ளது.

இந்த சோதனை ராக்கெட் முயற்சி அனைத்தும் சரியாக நடந்தால், ஓரியன் கேப்ஸ்யூல் 2024 ஆம் ஆண்டில் ஆர்ட்டெமிஸ் II மிஷனில், மனிதர்களை சந்திரனின் சுற்றுப்பாதைக்கு அழைத்துச் செல்லும், மேலும் ஆர்ட்டெமிஸ் III மிஷனில் விண்வெளி வீரர்களை சந்திரனின் மேற்பரப்புக்கு அழைத்துச் செல்ல இந்த காப்ஸ்யூல் பயன்படுத்தப்படும்.

1972 ஆம் ஆண்டில் அப்பல்லோ 17இல் விண்வெளி வீரர்கள் நிலவுக்கு சென்றுவந்த பிறகு, முதல் முறையாக மீண்டும் விண்வெளி வீரர்களை சந்திரனின் மேற்பரப்புக்கு அழைத்துச் செல்ல இந்த ஓரியன் ராக்கெட் பயன்படுத்தப்படும்.

 

View this post on Instagram

 

A post shared by NASA (@nasa)

Leave a Comment